உலகம்

தமிழக அமைச்சரவையில் சிறுபான்மை நல அமைச்சராக ஏ.எம். ஷாஜஹான்

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், வி.சி.க வின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏ. எம். ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சரவையில் இணைந்து கொண்ட வி. சி. க வின் வன்னியரசுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடாசியின் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். ஷாஜஹான் ஆகியோருக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும்.ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரானார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும்.

ஆளுநர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏ. எம். ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசு பாபநாசம் தொகுதியிலும், ஷாஜஹான் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம். எஸ். ஏ. ஷாஜஹான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி எம். பி., மாநில செயலாளர் அப்துல் பாசித், மாநில துணைச் செயலாளர்கள் ஜமால் முஹம்மது இப்ராஹிம், அப்துல் ரஹ்மான் ரப்பாணி, தென்காசி மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் செயலாளர் புளியங்குடி அல் ஆமீன், தேசிய எம். எஸ். எப். பொதுச்செயலாளர் முஹம்மது அர்ஷத், எம். எஸ். எப். மாநில செயலாளர் ஷபீக் அஹமது, மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகியுள்ளனர். இதுவும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *