வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் வைத்தியசாலையின் சில நோயாளர் பிரிவுகள்
நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக குறித்த அறைகளில் இருந்த நோயாளர்களை வேறு அறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
