உள்நாடு

பிறை தென்படவில்லை எனவே புனித ஹஜ்ஜுப் பெருநாள் இலங்கையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும்

ஹிஜ்ரி 1447 புனித துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று 17 கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்றது
இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கப்படாத காரணத்தினால் துல் ஹஹ்தா மாதத்தை இன்று 18 திங்கட்கிழமை 30 ஆக பூர்த்தி செய்து இன்று திங்கட்கிழமை மாலை மஹ்ரிபு தொழுகையைத் தொடர்ந்து புனித துல் ஹிஜ்ஜா மாதம் ஆரம்பமாவதாக
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் மெளலவி ஹிஷாம் அல் பத்தாஹி உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிரதித் தலைவர் மெளலவி புர்ஹானுத்தீன் உள்ளிட்ட அங்கத்தவர்கள் , பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அஹமட் அப்ரோஸ் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், வளிமண்டல திணைக்கள அதிகாரி மொஹமட் ஸாலிஹீன் ஏனைய பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தரீக்காக்களின் பிரதிநிதிகள், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், மேமன் சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(கொழும்பு நிருபர் ஏ.எஸ்.எம். ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *