உலகம்

இலங்கை குடியுரிமை பெற்ற தம்பதி திருவாடானை தொகுதியில் வாக்களித்தது அம்பலம் மதுரை விமான நிலையத்தில் கைது

மதுரை விமான நிலையத்தில் இலங்கையில் குடியுரிமை தமிழ்நாட்டில் ஓட்டு போட்ட இலங்கை தம்பதி கைது செய்யப்பட்டார்கள்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களில் வெற்றி பெற்று. முதல்வராக ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியையும் அவர் தொடங்கிவிட்டார். இதுவரை நடந்த தேர்தல் வர லாற்றில் இல்லாத அளவுக்கு இந்த முறை சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட வெளிநாட்டு இந்தியர்கள் ஏராளமான பேர் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்தனர்.

இதனால் சந்தேகம் கொண்ட தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டுக்கு வந்து ஓட்டுப்போட்ட வெளிநாட்டு இந்தியர்கள் மீண்டும் வெளிநாட்டுக்கு திரும்பி செல்லும்போது அவர்களை கண்காணித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் அனுப்பியது. அதன் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும் இந்தியர்களை தீவிரமாக கண்காணித்தனர்.

வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்லும் இந்தியர்களின் கைகளை சோதித்து பார்த்தனர். அவர்களது கை விரல்களில் ஓட்டுப்போட்ட ‘மை’ இருந்தால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களாக இருந்தால் தமிழகத்தில் ஓட்டுப்போடுவது சட்டவிரோதமாகும். அவ்வாறு கை விரலில் ‘மை’ இருந்தவர்களிடம் விசாரித்தபோது, நிறையபேர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றதோடு, தமிழகத்தில் உள்ள தங்களது பழைய வாக்களர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டுப்போட்டிருப்பது தெரியவந்தது.

அவ்வாறு ஓட்டுப்போட்டவர்களை பிடித்து குடியுரிமை அதிகாரிகள், அவர்கள் எந்த தொகுதியில் ஓட்டுப்போட்டார்கள்? என்பதை கண்டறிந்து, அவர்கள் ஓட்டுப் போட்ட எல்லையில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து முறையாக கைது செய்து பின்னர் நீதிமன்றம் மூலம் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த முகமது சுபீர் (வயது 65), அவருடைய மனைவி அஹானா பீவி (56) ஆகியோர் இலங்கை செல்வதற்காக விமான நிலையம் வந்தனர். அவர்களின் கை விரலில் வாக்களித்ததற்காக மை இருந்தது. மேலும், அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது இலங்கை குடியுரிமை பெற்றிருந்தது தெரியவந்தது.

ஆனால், திருவாடானை தொகுதியில் வாக்களித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் அதிகாரிகள், அவனியாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர். தொடர்ந்து நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதுவரை வரை மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை குடியுரிமை கொண்டவர்கள். இருப்பினும் பிரிட்டன் உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

வெளிநாட்டினர் சிலர் சட்ட விரோதமாக வாக்களித்துவிட்டு செல்வதாக சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலைய அதிகாரிகளை உஷார் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். அதில், ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாக சிலர் வாக்களித்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *