அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இருதவியல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள்
அனுராதபுரம் போனதா வைத்தியசாலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு இருதலியல் பிரிவு உள்ளிட்ட மேம்பாட்டு திட்டங்கள் எதிர் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கழிவுநீர் சீரமைப்பு மற்றும் புதிய மேம்பாட்டு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அனுராதபுரம் போனதா வைத்தியசாலையில் எதிர் வரும் ஆண்டுகளில் முழு வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் இறுதய சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல முக்கிய மேம்பாட்டுப் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. தற்போது போதனா வைத்தியசாலையில் ஏறத்தாழ 15 மேம்பாட்டு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போதனா வைத்தியசாலையில் நீர் விநியோக அமைப்பில் பல பிரச்சினைகள் இருப்பதால் அதன் பழுது மற்றும் மேம்பாட்டு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ 68 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இப்பணிகளை 5 மாதங்களுக்குள் நிறைவு செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பங்காளியான Central Engineering Consultancy Bureay நிறுவனத்தின் தலைவரின் தலைமையில் மேம்பாடுத்தவும் விரைவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தலைமையில் அமைச்சர் சுசில் ரணசிங்க வின் பங்களிப்புடன் பணிப்பாளர் அலுவலகத்தில் (09) நடைபெற்றது.




(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
