சீனன் கோட்டை மர்ஹூம் ரிபாஸ் கரீம் நினைவாக புத்தகங்கள் அன்பளிப்பு
அண்மையில் காலஞ்சென்ற பேருவலை-சீனன் கோட்டை இளம் இரத்தினக்கல் வர்த்தகர் அல்ஹாஜ் ரிபாஸ் கரீம் அவர்களின் 40ஆம் நாள் நினைவு தினமான நேற்று 13ஆம் திகதி புதன்கிழமை அன்னாரை நினைவு படுத்தும் வகையில் மர்ஹூம் ரிபாஸ் கரீம் அவர்களின் குடும்பத்தினரால் சீனன் கோட்டையில் அமைந்துள்ள அல் ஸலாஹ் அரபுக் கல்லூரியின் வாசிகசாலைக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் கித்தாபுகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
அன்னாரின் குடும்பத்தினர் சார்பாக தந்தை அல்ஹாஜ் ரவ்ப் கரீம், சகோதரர் அல்ஹாஜ் நபீஸ், மகனார் அர்கம் ரிபாஸ் ஆகியோர் புத்தகங்களை வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் கல்லூரி அதிபர், நிர்வாகிகளான அல்ஹாஜ் ஆரிப், அல்ஹாஜ் பெளஸான் ஹம்ஸா, அல்ஹாஜ் லியாக்கத் ரஸ்வி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





(பேருவலை பீ.எம்.முக்தார்)
