உள்நாடு

சவூதி அரேபிய மன்னரின் விருந்தினர்களாக புனித ஹஜ்கடமையை நிறைவேற்றச் செல்லும் 16 பேரை வழியனுப்பும் நிகழ்வு

சவூதி அரேபிய மன்னரும், இரு
புனித மஸ்ஜித்களின் பாதுகாவலருமான
சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் – சுஊதின் ஹஜ் விருந்தினர் திட்டத்தின் கீழ்,
இவ்வருடம் 16 இலங்கையர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானியின்
சிபாரிசிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களை வழியனுப்பு நிகழ்வு, கொழும்பிலுள்ள சவூதி அரேபியத்
தூதுவராலயத்தில் (06) புதன்கிழமை, சவூதி அரேபியத் தூதுவர் தலைமையில் இடம்பெற்றது.

பாதுகாப்பு அதிகாரிகள், சிவில் அதிகாரிகள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு இம்முறையும்
வழங்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபிய இஸ்லாமிய
விவகாரங்கள், அழைப்பு மற்றும்
வழிகாட்டல் அமைச்சின்
மேற்பார்வையில் ‘மன்னர் சல்மானின்
ஹஜ் மற்றும் உம்ரா விருந்தினர்
திட்டத்தின்’ (King Salman’s Guest Program for
Hajj and Umrah) கீழ், இந்த வாய்ப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *