உலகம்

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி

நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை புரிந்துள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 100 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்ட 27 தொகுதிகளில் 22 தொகுதிகளை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இ.யூ.முஸ்லிம் லீக் வெற்றிபெற்ற தொகுதிகளின் விவரம் :

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக், 22 இடங்களை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. அதன்படி, மஞ்சேஷ்வர் தொகுதியில் ஏ.கே.எம். அஷ்ரப், காசர்கோடு தொகுதியில் ல்லட்ரா மஹின், குட்டியாடி தொகுதியில் பாறக்கல் அப்துல்கலாமசேரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோன்று, பெரம்ப்ரா தொகுதியில் வழக்கறிஞர் பாத்திமா தாஹிலியா, கோழிக்கோடு தெற்கு தொகுதியில் வழக்கறிஞர் ஃபைசல் பாபு
குன்னமங்கலம் தொகுதியில், எம்.ஏ. ரசாக் மாஸ்டர், கொடுவள்ளி தொகுதியில், பி கே ஃபிரோஸ், திருவம்பாடி தொகுதியில் சி கே காசிம், கொண்டோட்டி தொகுதியில் டி.பி. அஷ்ரபாலி,ஈரநாடு பி.கே. பஷீர், மஞ்சேரி தொகுதியில், வழக்கறிஞர் எம். ரஹ்மதுல்லா, பேரிந்தல்மன்னா தொகுதியில் எல் நஜீப் காந்தபுரம் ஆகியோர் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

மேலும், மாங்காடா தொகுதியில் மஞ்சளாம்குழி அலி, மலப்புரம் தொகுதியில், பி.கே.குஞ்ஞாசலி குட்டி,வென்காரா தொகுதியில் கே.எம்.சாஜி, வள்ளிக்குன்னூ தொகுதியில், டி.வி.இப்ராஹிம், திருரங்கடி தொகுதியில் பி.எம்.ஏ சமீர், தனுர் தொகுதியில் பி கே நவாஸ், திரூர் தொகுதியில், குருக்கோலி மொய்தீன், கோட்டக்கல் தொகுதியில், பேராசிரியர் ஆபித் ஹுசைன் தங்ஙள், மன்னார்காடு தொகுதியில், வழக்கறிஞர் என். சம்சுதீன், களமச்சேரி தொகுதியில் வழக்கறிஞர் வி இ அப்துல் கஃபூர் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 100 சதவீத வெற்றி :

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற இ.யூ.முஸ்லிம் லீக்,வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மொத்தம் 73 ஆயிரத்து 181 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க.வேட்பாளர் சையத் புர்ஹானுதீனை 2 ஆயிரத்து 982 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதேபோன்று பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லீம் லீக் வேட்பாளர் ஏ.எம்.ஷாஜஹான் மொத்தம் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட த.வெ.க.வேட்பாளர் அசாருத்தீன் உஸ்மான் அலியை ஆயிரத்து 65 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

தேசிய தலைவர் வாழ்த்து :

கேரளா மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அனைவருக்கும், தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கேரளாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள இ.யூ.முஸ்லிம் லீக், போட்டியிட்ட 27 தொகுதிகளில் 22 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது, இயக்கத்திற்கு பெருமை அளிக்கிறது. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற இ.யூ.முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி உள்ளிட்ட 22 பேருக்கும் ஏக இறைவனின் அருள் கிடைக்க துஆ செய்வதாகவும், கேரள மாடலை பின்பற்றி நாடு முழுவதும் இ.யூ.முஸ்லிம் லீக் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்ட இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் மற்றும் ஏ.எம்.ஷாஜஹான் ஆகியோர் வெற்றி பெற்று, 100 சதவீத வெற்றியை ஈட்டி இருப்பது, இ.யூ.முஸ்லிம் லீக் தமிழ்நாடு அமைப்புக்கு கிடைத்த பெருமை என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். 17வது சட்டப்பேரவையில் இனி இ.யூ.முஸ்லிம் லீகின் குரல் ஒலிக்கும். சமுதாய பிரச்சினைகள் குறித்து, சமூக நலன்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இ.யூ.முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு பேரும் சிறப்பான முறையில் குரல் எழுப்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றிபெற துணையாக இருந்த திமுக தலைவர் மு.கஸ்டாலின், தோழமை கட்சி தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள அனைவரது பணிகளும் சிறக்க ஏக இறைவனின் அருள் கிடைக்க துஆ செய்வதாகவும் தம்முடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *