உள்நாடு

பேருவளையின் சமூக விருத்திக்காக களமிறங்கியுள்ள “BUSF” அமைப்பின் கன்னி அமர்வும், நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்

இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாட்டை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட “Beruwala Unity & Social Forum” (BUSF) அமைப்பின் கன்னி அமர்வும், நிர்வாக உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று மருதானையில் அமைந்துள்ள அமைப்பின் தலைவர் இல்லத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஸாபித் துல்பிகார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைப்பின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட அறிமுகம் மற்றும் யாப்பு வெளியீடு என்பன இடம்பெற்றன.

நிகழ்வின் சிறப்பம்சமாக, ஆலோசகர் அல்ஹாஜ் ஸவாஹிர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், அவரின் கரங்களினால் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அமைப்பின் கொள்கைகளை உறுதிப்படுத்தும் வகையில் உறுப்பினர்களினால் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பேருவளை சமூகத்தில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் கன்னி அமர்வு, மிகுந்த உற்சாகத்துடன் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *