இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தெற்கு மாகாணத்திலும் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
