பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவர் முஹம்மது பவுசர் அவர்களை கௌரவிக்கும் வகையில் கொழும்பில் சிறப்பு சந்திப்பு
பலஸ்தீனத்திற்கான இலங்கை தூதுவராக நியமனம் பெற்றுள்ள முஹம்மது பவுசர் அவர்களை கௌரவிக்கும் வகையில் நேற்று கொழும்பில் சிறப்பு சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, அவரது நீண்டகால சேவை மற்றும் திறமைகளை மதிக்கும் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன தலைவர் ஷாம் நவாஸ் தலைமயில் பதில் செயலாளர் .இசட். எப்,அஹமது பர்ஹன் அமைப்பின் முன்னாள் தலைவர்களான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், சட்டத்தரணி என். எம். ஷஹீட்,சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ், பிரதி தலைவர் நிஹால் பாரூக்,பொருளாளர் எம். எச். எம். இஹ்சான்,உதவி செயலாளர் நளீர் அஹமத்,மேல் மாகாண பணிப்பாளர் ரிஸ்மி மஹ்ரூப்,அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், என். எம். நஸ்ரான்.உள்ளிட்ட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனார்.
முஹம்மது பவுசர் அவர்கள் புதிய பொறுப்பை ஏற்று பலஸ்தீனத்திற்கு தூதுவராகப் பயணிக்கும் இந்த தருணத்தில், அவரது பணிகள் வெற்றிகரமாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
மேலும், இலங்கை மற்றும் பலஸ்தீன நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையையும் வெளியிடுகின்றோம்.அவரது புதிய பொறுப்பில் சிறந்த சாதனைகள் படைத்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென இதன் போது வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து பாலஸ்த்தீனதிற்கு தூதுவராக செல்லும் பவுசர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் அமைப்பினரால் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


