சிங்கப்பூரின் ராயல் கிங்ஸ் குழுமம் மற்றும் அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கிடையில் சந்திப்பு
ராயல் கிங்ஸ் குழுமத்தின் அலுவலகத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சிங்கப்பூருக்கு வருகை தந்தார்கள்.
அவரை ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சிராஜுதீன், குழுமத்தின் மூத்த ஆலோசகர் ஜலால் ஆகியோர் வரவேற்றார்கள்.
இந்த சந்திப்பு, இருதரப்பினருக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதோடு, பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் அர்த்தமுள்ள வாய்ப்பாக அமைந்தது. அதே நேரத்தில், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மேலும், இச்சந்திப்பு பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் வளர்ச்சியை நோக்கிய ஒருங்கிணைந்த பார்வையை வெளிப்படுத்துவதாக இருந்தது. இத்தகைய நிகழ்வுகள், நீண்டநாள் கூட்டாண்மை மற்றும் உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவை சிறப்பித்த அவரது வருகைக்காக ராயல் கிங்ஸ் குழுமம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகரமான சந்திப்புகளை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளது.


(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
