காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்க்கு கள விஜயம்
காத்தான்குடி மீடியா போரத்தின் ஊடகவியலாளர்கள் குழுவினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை (12) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்க்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ் விஜயத்தில் போரத்தின் ஆயுட்கால தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி) மற்றும் போரத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பராமரிப்பு நிலையத்தின் வளாகத்தை பார்வையிட்ட குழுவினர் அங்கு பராமரிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பிலும் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வருமான வழிமுறைகள் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கேட்டறிந்ததுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.




(எம்.பஹத் ஜுனைட்)
