வைத்திய சிகிச்சைக்காக காஸாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களை அழைத்துக் கொண்டது இத்தாலி..!
இத்தாலி அரசாங்கம் கடந்த புதன்கிழமை (13) இரவு காஸாவில் இருந்து 114 பலஸ்தீனர்களை தனது நாட்டுக்கு ஏற்றுக்கொண்டது, அதில் 31 குழந்தைகளுக்கு வைத்திய சிகிச்சை தேவையாக உள்ளது.
‘நாங்கள் காஸாவின் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், அமைதியை அடைவதற்கு பாடுபடுவோம்’ என இத்தாலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அன்டோனியோ தஜானி தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ளதொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘குழந்தைகள் நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தின் சின்னம்: அவர்களின் பராமரிப்பு மற்றும் வைத்திய உதவியை உறுதி செய்வது ஒரு கடமை.’
‘பலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதே எங்களுக்கு முக்கியமான விடயம்,’ என ரோமில் உள்ள குடும்பங்களை வரவேற்ற தஜானி ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
‘துன்பப்படுபவர்களுக்கு உதவுவதும், நமது நாட்டில் தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் எங்களுக்கு முக்கியம்.’
இஸ்ரேலின் தெற்கு நகரமான ஈலாட்டில் இருந்து மூன்று சீ-130 சரக்கு விமானங்களில் இத்தாலிய விமானப்படை குறித்த பலஸ்தீன மக்களை ஏற்றிச் சென்றது.
ஆறு நோயாளிகள் மற்றும் அவர்களது 22 உறவினர்களை ஏற்றிச் சென்ற விமானங்களில் ஒன்று ரோமின் இராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஏனைய விமானங்கள் முறையே 12 மற்றும் 13 இளவயது நோயாளிகளை ஏற்றிக்கொண்டு பிசா மற்றும் மிலனில் தரையிறங்கின.
பின்னர் பலஸ்தீனர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகள் கடுமையான காயங்கள் மற்றும் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அல்லது கடுமையான பிறப்பிலிருந்தே நோய்களுடன் இருப்பவர்களும் உள்ளனர் என இத்தாலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலி ஜனவரி 2024 தொடக்கம் 14 வைத்திய தேவைக்கான வெளியேற்றங்களை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, தெற்கு ஐரோப்பிய நாடு குடும்ப மறு ஒருங்கிணைப்புக்காக வந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,000 பலஸ்தீனர்களை காஸாவிலிருந்து வெளியேற்றியுள்ளது.
‘தன்னார்வ இடம்பெயர்வு’க்காக அழைப்பு விடுக்கும் நெதன்யாஹு.
இதனிடையே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காஸாவின் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையில் பெரும்பகுதியை ‘தன்னார்வ இடம்பெயர்வு’ என அவர் குறிப்பிடுவதன் மூலம் இடம்பெயர வைக்கும் தொலைநோக்கு பார்வையை உணர விரும்புவதாகக் கூறினார், இது விமர்சகர்கள் எச்சரித்துள்ள இன அழிப்புக்கு சமமான கருத்தாகும்.
‘அவர்கள் வெளியேற வாய்ப்பு கொடுங்கள். முதலில், போர் வலயங்களிலிருந்தும், அவர்கள் விரும்பினால், குறித்த பகுதியிலிருந்தும் வெளியேறட்டும்’ என நெதன்யாஹு செவ்வாயன்று இஸ்ரேலிய தொலைக்காட்சி நிலையமான ஐ24 உடனானதொரு நேர்காணலில், லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள காஸா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பாக கலந்துரையாடினார்.
‘நாங்கள் அவர்களை வெளியேற்றவில்லை, ஆனால் அவர்களை வெளியேற அனுமதிக்கிறோம்,’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, பலஸ்தீன அதிகாரசபை மற்றும் அரபு நாடுகள், நெதன்யாஹ} ‘பெரிய இஸ்ரேல்’ என்ற தொலைநோக்குப் பார்வையில் ‘மிகவும்’ உறுதி கொண்டுள்ளதாக ஐ24 தொலைக்காட்சி அலைவரிசைக்கு அவர் கூறியதைக் கண்டித்தன.
நெதன்யாஹு அதனை விரிவாகக் கூறவில்லை, ஆனால் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை மட்டுமல்ல, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளின் சில பகுதிகளையும் இஸ்ரேல் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
கடந்த மாதம் பேச்சுவார்த்தை முறிந்த பிறகு, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கெய்ரோவில் பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று நெதன்யாஹுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காஸாவிற்கான உதவியை ‘ஆயுதமயமாக்குவதை’ நிறுத்துமாறு உதவி குழுக்கள் இஸ்ரேலிடம் அழைப்பு விடுத்துள்ளன
காஸாவில், வாழ்க்கையைத் தக்கவைக்கத் தேவையான குறைந்தபட்ச அளவை விட மிகக் குறைவான உதவிகளே பிரதேசத்தை சென்றடைகிறன என நிபுணர்கள் எச்சரிக்கும் நிலையில், அங்கு நிலைமைகள் மோசமடைந்து வருகின்றன.
வியாழக்கிழமை, 100க்கும் மேற்பட்ட இலாப நோக்கற்ற குழுக்கள், காஸா பகுதியிலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பணிபுரியும் உதவி குழுக்களுக்கான இஸ்ரேலின் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அங்கு மிகவும் அத்தியவசியமாகத் தேவையான நிவாரணங்களைத் தடுக்கும் எனவும், இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சேவை செய்யும் சுயாதீன அமைப்புகளை பதிலீடு செய்யவைக்கும் எனவும் எச்சரித்தன, இதை இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஒக்ஸ்பாம், எல்லைகளற்ற வைத்தியர்கள் மற்றும் கெயார் உள்ளிட்ட குழுக்கள், மார்ச் மாதம் இஸ்ரேல் அறிவித்த பதிவுசெய்தல் விதிகளுக்கு பதிலளித்தன, அந்த விதிகள் குறித்த அமைப்புகள் தங்கள் நன்கொடையாளர்கள் மற்றும் பலஸ்தீன ஊழியர்களின் முழு பட்டியலையும் சரிபார்ப்புக்காக ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வது தங்கள் ஊழியர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், குழுக்கள் நாட்டை ‘பகிஷ்கரிப்பு’ செய்வதாகவோ அல்லது புறக்கணிப்பு அல்லது விற்பனையை ஆதரிப்பதாகவோ கருதப்பட்டால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளைத் தடுக்க இஸ்ரேலுக்கு பரந்த காரணங்கள் கிடைக்கக்கூடும் என அவ்வமைப்புக்கள் வாதிடுகின்றன.
மார்ச் மாதம் இஸ்ரேல் முற்றுகையை அமுல்படுத்தியதிலிருந்து அவர்களில் பெரும்பாலோர் உயிர்காக்கும் உதவியாக ‘ஒரு டிரக்’ உணவினை;கூட வழங்க முடியவில்லை என உதவி குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களும் குறைந்த எண்ணிக்கையிலான உதவி குழுக்களும் உதவி வழங்குவதை மீண்டும் தொடங்கியுள்ளன, ஆனால் அனுமதிக்கப்பட்ட லொரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று கூறுகின்றன.
காஸாவிற்கான மனிதாபிமான உதவிக்கு பொறுப்பான இஸ்ரேலிய இராணுவ அமைப்பான ஊழுபுயுவு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கடிதத்தில் உள்ள கருத்துக்களை மறுத்தது. புதன்கிழமை 380 லொரிகள் காஸாவுக்குள் நுழைந்ததாக அது கூறியது.
(எம்.ஐ.அப்துல் நஸார் )

