மாத்தளையில் 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறும் அதிபருக்கு கௌரவம்
இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த மாத்தனை நிக்ககொள்ள மின்ஹாஜ் மகா வித்தியாலய பிரதி அதிபர் கே.எம். அப்துஸ் ஸமது 36 வருட சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ். எம். பாஸில் தலைமையில் நேற்று (7) நடைபெற்றது.
மாத்தளை கல்வி வலயத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான இணைப்பதிகாரி எம். ஆர் யு .ரிழ்வான் இவ்விழாவுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மாத்தளை கல்வி வலய வளவாளர் ஹமீத் அகில் உட்பட முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கப் பிரமுகர்கள் மஸ்ஜித் நிருவாகிகள், சமூகநல இயக்க பிரமுகர்கள், பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
மின்ஹாஜ் மகா வித்தியாலய மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கும் முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்தியவர் என்றும் மாணவர்களுக்கு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வலய ,மாகாண, தேசிய மட்டத்தில் பரிசுகளை பெற்றுக் கொடுப்பதிலும் இவர் அரும்பாடு பட்டுள்ளார் என்றும் இதே பாடசாலையில் கற்று பல்கலைக்கழகத்திற்கு சென்ற முதல் ஆண் மாணவரும் அதிபர் அப்துல் சமது ஆவார் என்றும் இவ்விழாவில் பேசப்பட்டது.
இந்நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.



(ரஷீத் எம். றியாழ்)
