எம்.பீ.க்களுக்கு அடுத்த பட்ஜெட்டில் வாகனங்கள்..!
அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு வாகனத்தை அரசாங்கம் வழங்கும் என்றும், அந்த வாகனம் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலத்திற்குப் பிறகு திரும்ப பெறப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
