உள்நாடு

அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளை நிருவாகத்திற்கும் புத்தளம் மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் ஜம்இய்யாவின் உறுப்பினர்களுக்கும் புத்தளம் மாவட்டத்தின் அஹதிய்யா சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் மத்தியில் சிநேக பூர்வமான சந்திப்பு புதன்கிழமை 06.08.2025 ஜம்இய்யாவின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சில

  1. பாடசாலைகளின் அதிபர்களை சந்தித்தல்
  2. பாடசாலையில் முதல் தரம் தொடக்கம் உயர் கல்வி வரை கற்க்கும் அனைத்து மாணவர்களையும் அஹதிய்யா பாடத்திற்குள் உள்வாங்குதல்
  3. அஹதிய்யாவை பற்றி ஜும்ஆ தொழுகைக்கு பின் பொற்றோர்களிடம் தெளிவுபடுத்தல்
  4. ஞாயிற்றுக்கிழமையில் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை அனைத்து மேலதிக வகுப்புகளை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
  5. மார்க்கம் சம்பந்தமான அறிவுடன் வாழிபர்களை இணைத்தல்.

அஹதிய்யா உபகுழு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *