Wednesday, July 15, 2026
Latest:
உள்நாடு

பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் தெரிவு

பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் (பட்டியல்) உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு கோனஸ் (பட்டியல்) லுக்காக இந்த இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மத் இர்ஷாத் கடந்த தேர்தலில் மாளிகாஹேனை வட்டாரத்தில் போட்டியிட்டு 897 வாக்குகளை பெற்றார். எனினும் அவர் வெற்றிபெறவில்லை. அந்த வட்டாரத்தில் கட்சிக்கு கிடைத்த கூடுதல் வாக்குளை கொண்டு (விகிதாசார அடிப்படையில் ) அவருக்கு இந்த போனஸ் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல சமூக சேவையாளரான இவர் எலந்தகொடையை வசிப்பிடமாகக் கொண்டவர். முஹம்மத் நளீம் ஸீனதுல் முனவ்வரா தம்பதிகளின் புதல்வராவார்.

கடந்த தேர்தலில் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இர்ஷாத் நளீம் தெரிவித்தார். விஷேடமாக ஐக்கிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜமீல், ஐக்கிய மக்கள் சக்தி நிரைவேற்றுக் குழு உறுப்பினர் டாக்டர் ரூமி ஹாஷிம் ஆகியோருக்கும் கட்சி முக்கியஸ்தர்கக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
நகர சபைக்கு போனஸ் உறுப்பினராக தெரிவாகியுள்ள ரிஹானா ரவ்ப் இப்பிரதேசத்தின் பிரபல சமூக சேவையாளராவார்.

ரிஹானா பவுண்டேசன் ஸ்தாபஹரான இவர் விதவைப் பெண்களுக்கு சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ள தையல் இயந்திரங்களை பெற்றுக் கொடுத்து கல்வி, சமூக மற்றும் பொதுப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

பேருவளையைச் சேர்ந்த முஹம்மத் ரவ்ப் ஸபிய்யா உம்மா தம்பதிகளின் புதல்வியான இவர் இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போனஸ் பட்டியல் வேட்பாளராக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *