உள்நாடு

சீனன்கோட்டை முர்ஸியா ஸாவியாவில் கெளரவிப்பு நிகழ்வு

பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள முர்ஸியா ஸாவியாவில் புனித ரமழான் மாதம் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்குபற்றிய சிறார்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பரிசி வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு ஸாவியாவில் சிறப்பாக நடை பெற்றது.

சீனன்கோட்டை பள்ளி சங்க இணைச் செயலாளரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ்ஷாதுலி அஷ்ஷெய்க். இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), பள்ளிச் சங்க உப தலைவரும் சவூதி அரேபிய தூதரகத்தில் பணி புரியும் அதிகாரியுமான அஷ்ஷெய்க். எம்.எஸ்.எம் ரில்வான் (நளீமி) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸாவியா பரிபாலன குழு உறுப்பினர்கள், மஹல்லாவாசிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(படங்கள்: பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *