மினுவாங்கொடை அல் அமானிலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மினுவாங்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2024, 3ம் தவணைப் பரீட்சையின் தேர்ச்சி அட்டை வழங்கும் தரம் 10 – 12(13) வரையான வகுப்புகளின் பெற்றோர் – ஆசிரியர் கூட்டத்தில் கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 7 மாணவர்கள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மினுவங்கொடை கல்விக் கோட்டத்தின் 152 பாடசாலைகளில் ஒரேயொரு தமிழ் மொழி மூலப் பாடசாலை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகும்.
அதற்கமைய ஒரே தடவையில் 06 பேர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற சாதனை இம்முறை முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வுக்கு பாடசாலையின் அதிபர் எம்.டி.எம். ஆசிம் தலைமை தாங்கியதுடன், மினுவங்கொடை கல்வி வலய தமிழ் மொழி மூல பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.எம். ரிஷ்வி, பிரதி அதிபர் எம்.எஸ்.எம். ரிலான், உதவி அதிபர் எம். எச். எம். உபைதுல்லாஹ் மற்றும் பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், மற்றும் கல்லொழுவை கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம்.எம். எம். சுகைதர், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம்.ஆர்.எச். ஜெஸ்மி, பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ரிஷாத் ஆகியோருடன் தரம் 10 – 12(13) வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




(எம்.எச்.எம்.உபைதுல்லாஹ்)
