வட மத்தியின் புதிய செயலாளர் ரஞ்சன பிரேமநாத் பதவியேற்பு
வடமத்திய மாகாண புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.எம்.ரஞ்சன பிரேமநாத் ஜயசிங்க மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் (01) கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
ரஞ்சன பிரேமநாத் ஜயசிங்க நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார் .அவர் தனது ஆரம்பக் கல்வியை கட்டுலுகம கனிஷ்ட வித்தியாலயத்திலும் உயர்தரத்தை கட்டுபொத்த திஸ்ஸ மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்று ஜப்பானில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் களனி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
1993 ஆம் ஆண்டு ஆசிரியராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றிய அவர் 1998 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் பிரதேச உதவிச் செயலாளராக, செயற்திட்ட பணிப்பாளராக, உள்ளூராட்சி
ஆணையாளராக பணியாற்றிய பின்னர் வடமத்திய மாகாண சபையின் விவசாய அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அவர் வடமத்திய மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படும் வரை கேகாலை மாவட்டச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இதன் போது வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச.அமைச்சர் வசந்த சமரசிங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
