தர்கா நகரில் சுதந்திர தின மற்றும் கெளரவிப்பு விழாக்கள்
தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் ஏற்பாடு செய்துள்ள இலங்கையின் 77வது சுதந்திர தின வைபவமும், தர்கா நகரில் உள்ள மூன்று பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் (2024) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் விழாவும் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி மு.ப 10:00 மணிக்கு மேற்படி கல்வி நிலையத்தில் நடை பெறும்.
நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி. நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
தர்கா நகர் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, அல்-ஹம்ரா மகா வித்தியாலயம், அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலைகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களே நிகழ்வில் பரிசு வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
மூன்று பாடசாலைகளினதும் அதிபர்கள், சித்தியடைந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய பணிப்பாளர், சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்வர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)
