சம்மாந்துறை மபாசா வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை
சம்மாந்துறை மபாசா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்று ஐந்து மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
ஏ.ஆர். அப்துல்லாஹ் – 151, ஏ.எச். அலீனா அசானி – 150, எம். லிபா ஷைனப் – 149, எப்.எப். ஹிபா – 142, எம்.எஸ். சீறத் ஜானி – 139 ஆகியோரே, இவ்வாறு வரலாற்றுச் சாதனை பெற்றுள்ள மாணவச் செல்வங்களாவர்.
இச்சிறப்பு நிகழ்வில், வித்தியாலய அதிபர் திருமதி கே.கே. அஹமட்,
ஆசிரியர்களான எம்.எல். அமீர், ஏ. பாஹிமா ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )
