வேலை வழங்கக் கோரி புத்தாண்டில் போராட்டம்.
எப்பாவள பொஸ்பேட் நிறுவனத்தில் தொழில் புரிந்த தொழிலாளர் குழுவொன்று தங்களுக்கு வேலை வழங்கக்கோரி நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு (01) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒருவருட காலமாக பொஸ்பேட் நிறுவனத்தில் சாதாரண ஊழியர்களாக பணிபுரிந்த குழுவினரே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொஸ்பேட் நிறுவனத்தில் ஏறக்குறைய ஒரு வருடமாக தொழில் புரிந்த தாங்கள் தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் . இதனால் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.இது தொடர்பில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முகாமையாளருடனும் பல தடவைகள் கலந்துரையாடிய போதும் உரிய பதில் கிடைக்காத காரணத்தால் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
சுமார் நான்கு மணித்தியாலங்கள் போஸ்பேட் நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலை முற்றாக மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எப்பாவள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து தற்போதைய தலைவருடன் தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடு செய்தார்.
பின்னர் பொஸ்பேட் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த குமாரகே அவ்விடத்திற்கு வருகை தந்து பொஸ்பேட் நிறுவனத்தில் நாளாந்த வேலையாட்களுக்கான தேவை தற்போதைய நிலையில் தேவையில்லை எனவும்.எதிர்காலத்தில் அவ்வாறான தேவைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் நிறுவனம் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் என்றும் தெரிவித்ததனையடுத்து போராட்டக்காரர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.



(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
