நாவிதன்வெளியில் சுயதொழிலினை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கு
அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் ஒருங்கிணைப்பில் சுயதொழிலினை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் (10) பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வௌிநாட்டு தொழிலாளர்களது தற்கால சூழ்நிலை மற்றும் அவர்களது தொழில்வாய்ப்பு பற்றியும் தொழிலுக்காக வௌிநாடு செல்வது பற்றியும் சுயதொழிலை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வது பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இக்கருத்தரங்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அம்பாரை மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளர் ஏ.எம். பர்ஸான் மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அம்பாறை மாவட்ட அலுவலகம் சார்பாக எம்.ஏ.எஸ்.எம்.றிஸான் அபிவிருத்தி உத்தியோகத்தரும் நாவிதன்வெளி பிரதேச செயலக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம்)
