உள்நாடு

ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் ஆங்கில மொழி விருத்தி விழா.

ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆங்கில மொழியினை விருத்தி செய்யும் முகமாக நேற்று (11) புதன்கிழமை ஆங்கில மொழி விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வானது பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேற்படி நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எஸ்.எம். அமீர் தலைமையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளரும், ஏறாவூர் கல்விக்கோட்ட பணிப்பாளருமான டி.எம். செய்யது அஹமட் , கௌரவ அதிதிகளாக ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.வை. நஜிமுதீன் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினரும், இமாம் ஹஸ்ஸாலி பவுண்டேசன் அமைப்பின் தலைவருமான ஏ.ஆர். பிரௌஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக பஷீர் சேகுதாவூத் வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.சி. அஜ்மல் கான், ஓய்வு பெற்ற ஆங்கிலப்பாட ஆசிரியர்களான எம்.எஸ். அப்துல் ஹை,
எஸ். அஹமட் லெவ்வை, மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை ஆங்கில பாட ஆசிரியர் எம்.எச்.எம். ஜெஸீல், கணித பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.சி.எல். ஷில்மி, ஏறாவூர் ஹலீமா அரிசி ஆலை உரிமையாளர், பாடசாலை கொண்டு நலன் விரும்பி ஏ. றமீஸ் மற்றும் வர்த்தகர் ஏ. சத்தார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அதிதிகள் பலராலும் பாராட்டப்பட்டதுடன், பயிற்றுவித்த ஆசிரியைகளான சமீஹா ஹுசைன் மற்றும் என்.எப். நஸீஹா ஆகியோர் பிரதம அதிதியால் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் எண்ணிக்கை குறைவான சிறிய பாடசாலையாக இருந்த போதிலும் பாடசாலை நிர்வாகத்தினரால் சிறப்பாக இந் நிகழ்வு நடைபெற்று முடிந்தமையானது அதிதிகளினதும் பெற்றோர்களினதும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

(உமர் அறபாத் -ஏறாவூர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *