உள்நாடு

புதிதாக மின் இணைப்புக்களைப் பெறுவோருக்கு வரி இலக்கம் அவசியம்; இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

“புதிதாக மின் இணைப்புக்களை மேற்கொள்ளும் போது, வரி இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது அவசியம்” என, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன் வைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தற்போது, வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடப்புக் கணக்கு தொடங்குதல், நிலம், அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துக்களைப் பெறுதல் போன்ற வழக்குகளில், வரி இலக்கத்தைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை, நிதித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *