உதுமான்கண்டு முஹம்மது றிம்சான் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம்
சாய்ந்தமருது – 01 ஐச் சேர்ந்த உதுமான்கண்டு முஹம்மது றிம்சான் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிவான் முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தனது ஆரம்ப கல்வியை கமு/அல்-கமரூன் வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்ற இவர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சு. வி.அ.க. நிறுவகத்தின் நுண்கலை பட்டதாரியுமாவார்.
மேலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமானி பட்டப்படிப்பு மேற்கொண்டும் வருகிறார்.
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வரும் இவர், இலங்கை நீதிக்கான மய்யத்தின் ஸ்தாபக பிரதித் தலைவராகவும், கல்முனை சாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிறைவேற்று குழு உறுப்பினராகவும், கிழக்கு பல்கலைக்கழக சு.வி.அ.க.நிறுவக பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும், செயலாற்றி வருகிறார்.
இசைத்துறை கலைஞராகவும், சமூக செயற்பாட்டாளரான
இவர், ஆதம்பாவா உதுமான்கண்டு, சீனி முகம்மது லத்தீபா உம்மா ஆகியோரின் இரண்டாவது புதல்வருமாவார்.
திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் முயற்சியினால் மேற்படி சமாதான நீதவான் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
