காதர் மஸ்தான் நிதியொதுக்கீட்டில் உழுந்தடைப்பு உள்ளக வீதி அபிவிருத்தி..!
கிரமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொண்டச்சி கிராம அலுவலக பிரிவின் உழுந்தடைப்பு உள்ளக வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது.
1.4Million நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது.
நீண்டகாலமாக இவ்வழியால் பயணம் செய்யும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மிகவும் சிறமத்திற்கு மத்தியில் பயணித்து வந்தனர்.
குறித்த வேலைத்திட்டம் பாசித்தண்டல் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டம் 06.06.2024 வியாழக்கிழமை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மேற்படி வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு நிதியை வழஙுகிய கெளரவ இராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களுக்கு கொண்டச்சி மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
