ஹஜ்ஜுப் பெருநாள் உழ்கிய்யா தொடர்பான புத்தளம் மக்களுக்கான அறிவித்தல்..!
ஹஜ்ஜுப்பெருநாளையொட்டி வழங்கப்படுகின்ற உழ்ஹிய்யா தொடர்பாக புத்தளம் நகர சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இணைந்து பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் சென்ற முறை போன்று இம்முறையும் நகர சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
உழ்ஹிய்யா காலங்களில் ஏற்படுகின்ற வீனான பிரச்சினைகள், அசௌகரியங்களை தடுப்பது தொடர்பாக புத்தளம் நகர சபை, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், சமூக பொலிஸ் பிரிவு, புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை ஆகியோருக்கிடையே இடம் பெற்ற கலந்துரையாடலில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே உழ்ஹிய்யா கடமைக்காக மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் எதிர்வரும் 12.06.2024 ஆந் திகதிக்கு முன்னதாக நகர சபைக்கு சமுகமளித்து அனுமதிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.
உரிய நேரத்தில் அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறும், அவ்வாறு அனுமதிகளை பெற்றுக்கொள்ளாது உழ்ஹிய்யா நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற சட்ட பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
மேலும் உழ்ஹிய்யா பிராணிகளின் கழிவுகளை பொது இடங்களில் வீசுவதை முற்றாக தவிர்ந்துகொள்ளுங்கள்.
கழிவுகளை போடுவதற்காக புத்தளம் நெடுங்குளம் மைதானத்தில் வெட்டப்பட்டுள்ள பிரத்தியேக குழிகளிலும், புத்தளம் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ட்ரக்டர் வண்டிகளிலும் கழிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
