சுற்றுப்புறங்களை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை..!
கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாம் வாழும் சுற்றுப்புறங்களை துப்பரவாக வைத்துக்கொள்வதில் அசிரத்தை காட்டிவருவதுடன் ஆங்காங்கு குப்பைகூழங்கள் உட்பட தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள் போன்றன ஒதுக்கி வைத்திருப்பதையும் காணமுடிகிறது. இவைகளால் பின் நாட்களில் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் சாத்தியம் இருப்பதை இவர்கள் உணர்வதில்லை.
தற்போது வெய்யிற் காலமாகவிருப்பதால் இம்மக்கள் நோய்கள் பரவும் நிலைமை இருக்கமாட்டாதென எண்ணிக்கொண்டு இவ்வாறு குப்பைகூழங்களை அகற்றாமல் அல்லது புதைக்காமல் இருக்கின்றனர். மழை பெய்யும் போது இக் குப்பைகூழங்களால் தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகும். எனவே மக்கள் குப்பைகூழங்கள் மற்றும் அதனுடனுள்ள தண்ணீர் தேங்கக்கூடிய பாத்திரங்களை புதைத்துவிடுமாறு அல்லது அகற்றிவிடுமாறு பிரதேச சுகாதார அதிகாரிகள் தெரிவிப்பதுடன் தவறுவோர் மீது நடவடிக்கையெடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
(ஏ.எம்.ஜலீல்)