விளையாட்டு

கிலியான் எம்பாப்பே ரியல் மெட்ரிட் கழகத்தில்

உலகப்புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட நட்சத்திரமான கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) ஸ்பெய்னின் ரியால் மெட்ரிட் கழகத்தில் இணையவுள்ளதாக உதைப்பந்தாட்ட வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸின் முன்கள வீரரான 25 வயதான எம்பாப்பே தற்சமயம் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் செர்மைன் உதைப்பந்தாட்டக் கழகத்தில் விளையாடிவருகின்றார். இந்நிலையில் அக் கழகத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்காற்றிவரும் இவர் நடப்பு ஆண்டில் அக் கழகத்தை விட்டு விழகி ஸ்பெய்னின் ரியல் மெட்ரிட் கழகத்திற்காக தொழில் முறை உதைப்பந்தாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இதுவரையில் இவ்வாறான மாறுதல்களுக்கு எந்தவொரு ஒப்பந்தத்திலும் எம்பாப்பே கையெழுத்திடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பாப்பே இதுவரை பாரிஸ் செயின்ட் செர்மைன் கழகத்திற்கான இதுவரையில் மொத்தம் 244 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் எம்பாப்பே ஸ்பெய்னின் ரியால் மட்ரிட் கழகத்துடன் ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தோடு ஒவ்வொரு உதைப்பந்தாட்டப் பருவத்திலும் எம்பாப்பே 15 மில்லியன் யூரோக்கல் சம்பாதிக்கக்கூடும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *