சீனன் கோட்டையில் வருடாந்த புனித மிஃராஜ் தின மவ்லித் மஜ்லிஸ்..
நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் புனித மிஃராஜ் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். சமய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள் மற்றும் தக்கியாக்களில் விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பேருவலை சீனன்கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்த (கட்டுக்குருந்தை) இப்றாஹிமிய்யா ஸாவியாவில் வருடாந்தம் நடைபெற்று வரும் புனித மிஃராஜ் தின மவ்லித் மஜ்லிஸ் 2024.02.07 ம் திகதி புதன்கிழமை மாலை ஸாவியா பிரதம இமாம் மௌலவி முஹம்மத் முத்தலிப் ஆலிம் தலைமையில் நடைபெறும். கொழும்பு பெரிய பள்ளிவாசல் கதீப் மௌலவி அல்ஹாஜ் எம். தல்ஹா (பாரி) இறைத்தூதரின் புனித மிஃறாஜ் யாத்திரை என்ற தலைப்பில் விஷேட சொற்பொழிவாற்றுவார்.
அஸர் தொழுகையை தொடர்ந்து மிஃராஜ் மவ்லித் மஜ்லிஸ். மஃரிப் தொழுகையை தொடர்ந்து வலீபா, யாகூதிய்யா, ஹழரா மஜ்லிஸ் ,இஷா தொழுகையை தொடரந்து முஸாக்கராவும் இடம் பெறும்.
(பேருவளை பீ.எம் முக்தார்)