உள்நாடு

சம்மாந்துறை மபாஷா பாடசாலையின் வகுப்பறை திருத்தம் நிறைவேற்றம்…!

சம்மாந்துறை கமு/சது/ மபாஸா வித்தியாலத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த வகுப்பறை புணர்நிர்மானம் இன்று (பெப்.05) மபாஷா மஹல்லா ஒன்றியம் ஊடாக நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது.

பாடசாலையினால் கடந்த வாரம் மபாஷா மஹல்லா ஒன்றிய செயலாளர் அஷ்கி அஹமட் (Maldives Embassy) அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இவ்விடயம் முழுமையாக கண்கானிக்கப்பட்டு தகவல் திரட்டிய பின்னர் ஆலோசனைக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்விடயம் சார்பாக அமைப்பின் தலைவர் அன்வர் (SLPA) மற்றும் உப தலைவர் ரியாஸ் (DEO Al Masraful Isalmiya) ஆகியோர் உடனடியாக செயற்பட்டு பாடசாலை மாணவர்களுக்கான வகுப்பறையை இன்று திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மபாஷா மஹல்லா அமைப்பின் தலைவர், சமூக செயற்பாட்டாளர் மனாஸ் மற்றும் பாடசாலை நிர்வாகம் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *