முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தேசிய சுதந்திர தினம் – 2024
இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 6 மணிக்கு, இலக்கம் 228, இரண்டாம் குறுக்குத் தெரு, கொழும்பு – 11இல் அமைந்துள்ள சம்மான்கோட்பள்ளி அல் ஜாமியுல் அழ்பர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸலின் ஒருங்கிணைப்பில்,
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியின் தலைமையில் நடைபெறும் இந்த சுதந்திர தின விழாவில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் உட்பட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்..
(எம்.எம்.எம்.ஸாகிர்)