உள்நாடு

ஐ.எம்.எப். பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு..

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவோடு கூடிய, அதன் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் அண்மையில் (31) புத்தளம் நகர மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி சனூன் தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 21 மழலை சிறார்கள் தமது கன்னி திறமைகளை அரங்கத்தில் வெளிக்கொணர்ந்தனர்.

“நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை” என்பது இந்த வைபவத்தின் தொனிப்பொருளாகும்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பிள்ளைகளுக்கும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள், ஐ.எப்.எம்.பழைய மாணவர் எனும் மகுடம் சூடியுள்ள சமூகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும்,
பேராதனை பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளரும், குறித்த இந்த முன்பள்ளியின் பழைய மாணவருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார், சிறுவர் பராமரிப்பு மற்றும் உளவியல் தொடர்பான விரவான உரையினை வழங்கினார்.

இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு புத்தளத்தில் இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.

 

(எம்.யூ.எம்.சனூன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *