அரநாயக்க திப்பிட்டியில் இரத்ததான முகாம்..
அரநாயக்க திப்பிட்டிய கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான அமைப்பினால் (feed) வருடாந்தம் நடைப்பெறும் இரத்ததான முகாம் ஒன்று 2025/02/03 அன்று சனிக்கிழமை வில்பொல அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீட் அமைப்பின் மூலம் ஏழாவது தடவையாக நடைப்பெற உள்ள இவ் இரத்ததான முகாம் காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி நேரம் வரை நடைப்பெற உள்ளதாகவும்,இரத்ததானம் வழங்கும் பெண்களுக்கான பிரத்தியோக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ,இரத்ததானம் வழங்க வருவோர் தாங்கள் அடையாள அட்டைகளோடு வருமாறும்,ஏற்பாட்டு குழு தலைவர் எஸ் .எம் .எம். மர்சூக் ஹாஜியார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
(பாரா தாஹீர் அரநாயக்க செய்தியாளர்)