Tuesday, August 11, 2026
Latest:
உள்நாடு

மாவனல்லை தீ விபத்து: விசாரணைகள் துரிதம்..!

மாவனல்லை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாலும்,பிரதேச சபை சந்தை கட்டிடத்திற்கு அருகிலும் அமைந்திருந்த சிறிய கடைத் தொகுதி நேற்று நள்ளிரவு தீப்பற்றி எரிந்தது. அனர்த்தம் இடத்திற்கு உடன் விரைந்த பொலிஸார் பிரதேச மக்களுடனும்,மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரின் உதவியோடும் சேர்ந்து தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனரென மாவனல்லை வர்த்த சங்கத்தின் செயலாளர் கே.எம். அமீனுல்லாஹ் அவர்கள் தெரிவித்தார். பழக்கடை,பிடவைக்கடை,சில்லறைக் கடை உள்ளடங்களாக 21 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளன. தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைக்களை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(பாரா தாஹீர் அரநாயக்க செய்தியாளர்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *