Wednesday, July 29, 2026
Latest:
உள்நாடு

ரணிலை வெல்ல வைக்க புதிய கூட்டணி.

மொட்டு கட்சியின் அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய புதிய அரசியல் முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.இவர்களது முதலாவது கூட்டம் சனிக்கிழமை ஜாயலையில் நடைபெற்றது.

அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, நளீன் பெர்னான்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமால் லன்சா, அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் இந்த முண்னனியில் செயற்படுகின்றனர்.

குறிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இவ் முண்ணனியில் கூடுதலாக பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களே இருப்பார்கள் எனவும், தாம் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் கூட்டங்களை நடாத்த இருப்தாகவும் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்காகவே இவ் முண்ணனி உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா இதன் ஸ்தாபகராவார். ஜாயலையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *