என்டி புர்ன்ஹாம் பிரிட்டனின் புதிய பிரதமராக திங்கள் பதவியேற்பு
பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் என்டி புர்ன்ஹாம் எதிர் வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாகக் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக மூத்த தலைவரான என்டி புர்ன்ஹாம் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவரே பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள என்டி புர்ன்ஹாம், இதற்கு முன்னதாக ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ பகுதியின் தலைவராகப் பணியாற்றிப் பரவலான அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி, பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நான் முழுமையாகப் பாடுபடுவேன்” என தனது புதிய பொறுப்பு குறித்துப் உறுதியளித்துள்ளார்.
