உள்நாடு

சயீடா பவுண்டேஷன் அனுசரணையில் புளூமெண்டல் மகளிர் பாடசாலைக்கு கணினி கூடம்

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், துபாய் சயீடா பவுண்டேசனின் இலங்கைப் பணிப்பாளரான நௌசர் பௌசியின் அனுசரனையில் கொழும்பு புளுமெண்டால் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு 18 கணனிகளை கொண்ட ஓர் கணினிக் கூடம் ஒன்று நிறுவப்பட்டது. கல்லூரியின் அதிபர் , பழைய மாணவிகள் வேண்டுகோளின் பேரில் இக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

இக் கணனிக் கூடத்தை திறந்து வைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது தந்தை ஏ.எச்.எம். பௌசியையும் நௌசர் பௌசி அழைத்து அதனை திறந்து வைத்தார்.

ஏற்கனவே இக் கல்லூரிக்கு 100 மில்லியன் ரூபா செலவில் நௌசர் பௌசியின் வேண்டுகோளின் பேரில் இக் கல்லூரி பழைய மாணவர் துபாய் சயீடா பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் பாரியார் பரிதா சலிம் இக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார் அவரின் பெயர் பதிக்கப்பட்டு இக் கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவுக்கு முஜிபு ரஹ்மான், ரவூப் ஹக்கீமும் சமுகமளிக்கவில்லை. அதன் நிமித்தம் அரச எதிர்கட்சி சகல பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இக் கட்டிடத்தையும், கணனிக் கூடத்தையும் அழைத்து திறந்து வைத்தாக நௌசர் பௌசி கூறினார்.

மேலும் ரவூப் ஹக்கீம் தனது கண்டி மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு உதவும் படியும் நௌசர் பௌசியிடம் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் றிசாத் பதியுத்தீன் குறிப்பிடுகையில், தற்பொழுது பாடசாலைகளை அரசாங்கம் நிர்மாணிக்க வில்லை. நௌசர் பௌசி போன்று நேற்று முன்தினம் கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா இல்யாஸ் ஹாஜி போன்ற முஸ்லிம் தனவந்தர்கள் மட்டுமே நிர்ணயிக்கின்றனர்.
இந்த புளுமெண்டால் பாடசாலைக்கு கடந்த 50 வருடங்களுக்கு பிறகு நௌசர் பௌசியின் முயற்சியில் இந்தக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனோ கனேசன் குறிப்பிடுகையில் பாருங்கள் இந்த நாட்டில் அமைச்சரால் கூட செய்ய முடியாத வேலையை எனது நண்பன் நௌசர் பௌசி செய்து கொண்டிருக்கின்றார். கொழும்பு மாவட்டத்தில் 27 பாடசாலைகள் தமிழ், முஸ்லிம் பௌத்த கிறிஸ்தவ பாடசாலைகள் கட்டிடங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். அதில் எனது வேண்டுகோளுக்கிணங்க கொழும்பு கலைமகள் 3 மாடிக் கட்டிடம் நிர்மாணித்து அதனை எனது கையால் திறந்து வைத்தார். ஆனால் அவரிடம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் கேட்டிருந்தார் ஆனால் எமது மக்கள் அவருக்கு வாக்கு கொடுக்கவில்லை . அவர் எந்த அரச அங்கிகாரமின்றி தனது முயற்சியை செய்து வருகின்றார்.

நவ்சர் பௌசி குறிப்பிடுகையில் எனது அனுசரணையாளர் சயீடா பௌன்டேசன் அவர்கள் கல்விக் கூடங்களின் எனது கட்டிடங்களை சொத்துக்களை விற்று பாடசாலைகளுக்கு கொடு என்று தான் சொல்வார். ஒரு காலத்தில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார்கள். ஆனால் எமது எதிர்கால சந்ததியினர்களுக்கு கல்விக்குத்தான் நாம் உதவி செய்வோம்.

புத்தளம், மாத்தறை கொழும்பு மாவட்டங்களில் 27 பாடசாலைகள் அபிவிருத்தி செய்துள்ளோம். ஆனால் பாடசாலைக் கட்டிடங்கள் நிர்மானிக்கும் போது அதற்கான அனுமதி வரைபடம் என பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து அதனை கல்விப் பணிப்பாளர்கள் அனுமதி தந்த பின் இவ்வாறு கட்டிடங்களை நிர்மாணிக்கின்றோம்.” என்றார்.

(அஷ்ரப் .ஏ. சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *