தர்கா நகரின் பெருமை: உச்ச நீதிமன்றத்தில் தடம் பதித்த சட்டத்தரணி சஸ்ரா சுவைப்!
தர்கா நகரைச் சேர்ந்த மொஹமட் சுவைப் மற்றும் பாத்திமா ரிஹானா தம்பதியினரின் அன்புப் புதல்வியான செல்வி. சஸ்ரா சுவைப், கடந்த 23.06.2026 அன்று மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சட்டத்தரணியாகச் (Attorney-at-Law) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
களு/ அளுத்கம முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலையின் 2018 உயர்தர மாணவியான இவர், யாழ் பல்கலைக்கழகத்தில் தனது சட்டக் கல்வியை (LL.B) நிறைவு செய்து இன்று இந்த உயரிய சாதனையை அடைந்துள்ளார்.
கடின உழைப்பால் நம் ஊருக்குப் பெருமை சேர்த்துள்ள சட்டத்தரணி சஸ்ரா சுவைப் அவர்களின் எதிர்கால சட்டப் பணிகளும், சமூக சேவைகளும் சிறந்து விளங்க தர்கா நகர் மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! ✨
வாழ்த்துக்களுடன்:
✍️ Faisan Hamsa

