உலகம்

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயக வழியில் செயல்படுதோ, அதேபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியும் ஜனநாயக வழியில் செயல்படுகிறது

சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இலங்கையை சேர்ந்த தீவிரவாத செயலில் சம்பந்தப்பட்ட ஒரு எம்பியோடு இப்போ புதியதாக ஆட்சி அமைந்த பிறகு சந்தித்துப் பேசினதா சொல்றாங்க. அது எப்படி சாத்தியமாகும்? தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் பேட்டி

————————————————————————————————————————————————————————————

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயக வழியில் செயல்படுதோ, அதேபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியும் ஜனநாயக வழியில் செயல்படுகிறது.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இலங்கையை சேர்ந்த தீவிரவாத செயலில் சம்பந்தப்பட்ட ஒரு எம்பியோடு இப்போ புதியதாக ஆட்சி அமைந்த பிறகு சந்தித்துப் பேசினதா சொல்றாங்க. அது எப்படி சாத்தியமாகும்? என்று தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ராஜகிரி காயிதே மில்லத் மண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களுக்கு பாராட்டு விழா 27-06-2026 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
பின்னர் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : மறுக்கபடக்கூடிய வகையிலே ஒரு தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு என்பது மதம் இனம் சார்ந்தது அல்ல. இது சமுதாயத்திலே பின்னிலையிலே இருக்கக்கூடிய இருப்பவர்களை உயர்த்தக்கூடிய வகையிலே இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் உருவாக்கித் தந்த அரசியல் நிர்ணய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது.

அந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முற்றிலும் மாற்றமான ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாட்டினுடைய முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடத்து கடந்த இரண்டு தினங்களாக கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையிலே இன்றைய தினம் தமிழ்நாட்டினுடைய சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்களும் பத்திரிகையாளர் சந்தித்து மேல்முறையீடு செய்யப்படும் என்ற தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
சட்ட வல்லுநர்களுடனும், அரசின் உயர் அதிகாரிகளுடனும், அமைச்சர் பெருமக்களும் தொடர்ச்சியாக ஆலோசனை செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களிலே உச்ச நீதிமன்றத்திலே நிச்சயமாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்த உரிமைகள் பறிபோகாதவாறு காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக மேற்கொள்ளும்.

ஏற்கனவே அவங்களோட தலைமையில் இருந்த ஒரு கட்சிதான். அதுல நம்ம விவகாரங்களை சர்ச்சையாக்க விரும்பலங்கிறது ஒன்னு. இரண்டாவது இந்த அருப்புக்கோட்டையில பேசின ஒரு பேச்சுக்கான ஒரு எதிர்வினை தான் அப்படிங்கிற மாதிரி அவங்க காமிச்சுகிட்டு இருக்காங்க. நம்ம ஒவ்வொரு அந்த அருப்புக்கோட்டையில பேசின 14 நிமிஷம் வீடியோலேயும் சொன்னோம், காலத்தின் சூழ்நிலை கருதி, ஒன்றிய பாஜக அரசினுடைய கைப்பாவையாய் இருக்கக்கூடிய ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்ற அடிப்படையில், தமிழகத்தில் வெற்றிகரமாக ஆட்சி அமைப்பதிற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் துணை நின்றது.
அதற்குப் பிறகு அமைச்சரவையிலும் பங்கேற்பது என்ற முடிவை முஸ்லிம் லீக் எடுத்தது. இது வந்து முஸ்லிம் லீக் உடைய தனிப்பட்ட உரிமை. எந்த கட்சியும் இந்த முடிவை எடுக்கலாம். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முன்னணி தலைவர்கள் இன்னும் சொல்லப்போனால், முன்னாள் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நாங்களெல்லாம் அமைச்சரவையா பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் எல்லாம் தெரிவித்தார்கள்.

இருந்தாலும் அடுத்த நிலையிலே இருக்கக்கூடிய தலைவர்கள் முஸ்லிம் லீகையும், முஸ்லிம் லீக் தலைவர்களையும் தரம் தாழ்ந்து விமர்சித்ததோடு, கொச்சை வார்த்தைகள் கொண்டு விமர்சித்ததோடு, அதனுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக வலைதளங்களிலே மற்ற திமுகவின் நிர்வாகம் தொடர்ச்சியாக விமர்சித்ததின் விளைவாகத்தான் எங்களுடைய ஆதங்கங்களையும் கொட்டித் தீர்க்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது.

மற்றபடி இது இந்த பேச்சு என்பது ஒரு ஆதங்கத்தினுடைய வெளிப்பாடாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, அதையும் தாண்டி தமிழக வெற்றிக் கழகத்தினுடைய ஆட்சி அமைவதற்கு முஸ்லிம் லீக் துணை நின்றது என்பது முஸ்லிம் லீக் உடைய தன்னிச்சையான முடிவு என்ற அடிப்படையில் இதையெல்லாம் கடந்து அனைவரும் அரசியல் ரீதியாக பயணிக்க வேண்டும் என்பதுதான் இந்த தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய முடிவாக இருக்கும்.

பெரிய ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் தினந்தோறும் பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலே பக்குவம் இல்லாத பேச்சுகளை சமூக வலைதளங்களிலே திமுகவினர் பரப்பி வருவது நிச்சயமாக அவர்களுக்கு மேலும் பின்னடைவை உருவாக்கும் என்ற காலமான கவலையும் நமக்கு இருக்கிறது. அதையெல்லாம் மாற்றிக்கொண்டு ஆக்கப்பூர்வமாக தமிழ்நாட்டினுடைய நலனுக்காக, தமிழ் மக்களின் நலனுக்காகச் சிறப்பாக அனைவரும் இணைந்து பயணிப்பதுதான் நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும்.
இலங்கைக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இருக்கக்கூடிய தொடர்பு காயிதே மில்லத் காலத்தில் இருக்கக்கூடிய ஒரு தொடர்பு. எப்படி தமிழ்நாட்டில் இந்தியாவில் சிறுபான்மை மக்களின் நலனுக்காக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயக வழியில் செயல்படுதோ, அதேபோல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு நீண்ட நெடுங்காலமாக அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு முறை நான் ஸ்ரீலங்கா போனதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோட தலைவராக இருக்கக்கூடிய ரவூஃப் ஹக்கீம் அவர்களுடைய அழைப்பின் பேரில் தான் போனோம்.
அது 2019-ல போனது அவருடைய மகளாரோட திருமணத்திற்கு, தமிழ்நாட்டில் இருந்து 30-க்கும் அதிகமான அரசியல் பிரமுகர்கள் போனோம். அதைத்தான் நான் மட்டும் போயிட்டு வந்த மாதிரி ஒரு கதை கட்டிக்கிட்டு இருக்காங்க. அதுல இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழி அவர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய இன்றைய நாகப்பட்டினம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா அவர்களும், முன்னாள் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆசிம் ச நவாஸ் போன்ற கிட்டத்தட்ட 30 பேருக்கு அதிகமானவங்க தான் அந்த கலந்துக்க போயிட்டு வந்தோம். அதுல எங்க தீவிரவாத தொடர்பு என்ன பேச்சுன்னு தெரியல, ஒன்னு.
இரண்டாவது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் போனது நாகூர் ஹனிபா அவர்களுடைய நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு நாம போயிருந்தோம். அதுல முஸ்லிம் லீக்காக நாங்க மட்டும் எல்லாம் போகல. எம்பியா இருந்த திமுகவோட எம்பியா இருந்த எம்.எம்.அப்துல்லாவும் வந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்தாரு. அதேபோல நிறைய மற்ற கட்சிப் பிரமுகர்களும் வந்தாங்க. இதான் நடந்த நிகழ்வுகள். ஆனால் அந்தச் செய்திகளில் சொல்லப்படுபவது எக்மோர்ல இருக்கக்கூடிய சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் இலங்கையை சேர்ந்த தீவிரவாத செயலில் சம்பந்தப்பட்ட ஒரு எம்பியோடு இப்போ புதியதாக ஆட்சி அமைந்த பிறகு சந்தித்துப் பேசினதா சொல்றாங்க. அது எப்படி சாத்தியமாகும்? இலங்கையில் இருந்து இருக்கக்கூடிய ஒரு எம்பி இந்தியாவுக்குள்ள வரணும்னா அதற்கான சோதனை, எல்லா செய்தியும் முடிச்சுட்டு வர முடியும்.
தெரியாம ஒரு அவங்க வந்து இறங்கிட முடியுமா? இலங்கை எம்பி. அப்படி நடக்காத ஒரு செயலை, நடந்ததாக கற்பனையா ஒரு சில கால்புணர்ச்சியோடு பிஜேபியுடைய ஆதரவு ஊடகங்கள் பேசப் போயி, அதையே நக்கீரன் போன்ற பத்திரிக்கை எடுத்துவிடப்போய் துளியும் உண்மையில்லாத ஒரு செய்தி தான். இன்னொன்று சொல்லப்போனால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ச்சியாகத் தேசிய ஒருமைப்பாட்டிற்கும்,

இந்தத் தேசத்திற்கும் எந்தவிதமான சின்ன நியூசென்ஸ் கேஸ்ல (Nuisance Case) கூட ஈடுபடாத அளவுக்குப் பக்குவமாகச் செயல்படக்கூடிய வழியில் தான் தலைவர்கள் வழிநடத்தியிருக்காங்க. அதனால உண்மைக்குப் புறம்பான ஒரு கால்புணர்ச்சியோடு பதிவு செய்யப்பட்ட இந்தச் செய்திகள் எல்லாம் மக்களாகிய நாம் புறந்தள்ளுறதுதான் நன்மை பயக்கக்கூடியதா இருக்கும் இவ்வாறு அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் கூறினார்.

பேட்டியின் போது மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காசிம் ராஜாளி, பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட ஜமாஅத் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *