வண்ணாத்திவில்லு பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வர்ணகுலசூரிய வின்சன் பிரான்சிஸ் இன்று (27) வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவரைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு 10 வாக்குகள் கிடைத்ததுடன், தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு 08 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
உப தலைவர் பதவிக்கான தெரிவிற்காக திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 11 வாக்குகள் பெற்று உப தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேவேளை, எதிர்ப்புற வேட்பாளருக்கு 06 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
உள்ளூராட்சி தேர்தலுக்குப் பின்னர், இந்தப் பிரதேச சபையின் வாக்கெடுப்புக்கு எதிராக ஒரு தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
