சில்மியாபுர அல் முர்ஷித் மாணவர்கள் வரலாற்றுச் சாதனை
பதுளை மாவட்டத்தின் சில்மியாபுர ப/அல் முர்ஷித் மகா வித்தியாலய மாணவர்கள் இவ்வருடம் வெளிவந்த க.பொ. த. உயர்தர பரீட்சையில் வெலிமடை கல்வி வலய மற்றும் மாவட்ட மாகாண ரீதியில் சகல முன்னனி பாடசாலைகளையும் பின் தள்ளி தமிழ், சிங்கள மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி மூலங்களிலும் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் எழுதிய சகல பாடங்களிலும் 100 சதவீத சித் தியைப் பெற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளனர். அத்துடன் 21 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி அனைத்து மாணவர்களும் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் அடிப்படை தகுதியைப் பெற்றுள்ளனர். இம்மா
ணவர்கள் எவரும் பிரத்தியேக வகு ப்புகளுக்கு செல்லாமல் இதே ஆசி ரியர்களிடம் கல்வி கற்றவர்கள் என பிரதி அதிபர் எம். எச். எம். சத்தார் தெரிவித்தார்.
பாடசாலை மட்டத்திலும் இந்தப் பெ றுபேறு ஒரு வரலாற்றுச் சாதனை என பாடசாலையில் அதிபர் எச்.எம் பதாஉல்லா தெரிவித்தார். இந்தச் சாதனை வெற்றி தொடர்பில் பாட சாலை மாணவர்கள் ஆசிரியர்களு க்கு பாராட்டு விழாக்கள் நடத்தப்பட் டு வருவதாகவும் அவர் தெரிவித் தார்
அத்துடன் வலயக் கல்வி அலுவலக ம் மாகாண உட்பட ஊவா மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கல் வி அமைச்சின் அதிகாரிகளும் சிற ந்த பெறுபேறுகள் பெற வழிகாட்டி ய பாடசாலை அதிபர் எச்.எம்.பதா உல்லா மற்றும் நிர்வாகம் ஆசிரிய ர்கள் பாடசாலை அபிவிருத்தி சங் கம் பழைய மாணவர் அமைப்பு பெ ற்றார்கள் நலன் விரும்பிகள்அனை வருக்கும் பாராட்டுகளை தெரிவித் துள்ளனர்.
பாடசாலை அதிபரின் நேர்த்தியான நிர்வாகத்தில் கற்பித்து வழிகாட்டி ய ஆசிரியர்களானஎம்.ஆர்.பி.கரீமா (பகுதித் தலைவர்) எம்.எம் . மாஜிதா பானு என்.டீ. நௌஜான் பானு என். எம். நூருல் சாபியா எம்.டபிள்யூ.எம். யாஸிர் ஏ.எஸ். முனவ்வரா எஸ்.எச். எப். சுமையா ஏ.எச்.எம். றிஸ்வி ஏ. எஸ். எப். நிலூபா ஆகியோரையும் படத்தில் காணலாம்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)
