உள்நாடு

சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகாரசபையின் புதிய நிர்வாகத் சபைத் தெரிவு

சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகார சபையின் 2026ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசா அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் நிர்வாக தலைவருமான எம்.எம்.ஆசிக் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கலாசார சபையின் நிர்வாகத் தலைவராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், ஒருங்கிணைப்பாளராக கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூசா, கலாசார அதிகார சபையின் தலைவராக அஸ்வான் சக்காப் மௌலானா, செயலாளராக ஓய்வு பெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ. அஷ்றப், உபதலைவராக ஊடகவியலாளர் யூ.எல். நூறுல் ஹுதா, உப செயலாளராக எம்.ஐ.எப். சஜினா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் செயற்குழு உறுப்பினர்களாக கலைஞர்களான யூ.எல். ஆதம்பாவா, பல்துறை கலைஞர் என்.எம். அலிக்கான், ஊடகவியலாளரும் பல்துறைக் கலைஞருமான எம்.எஸ்.எம். ஸாகிர், எம்.ஏ. பஸ்லியா, எம்.ஆர். பானு, எஸ். முர்சிதா, பாசக்கவி எம்.ஏ.சீ.எம். பாயிஸ்கரீம் (ஜே.பி), ஏ.எல்.எம்.முஸ்தக், எம்.ஐ.எம். றியாஸ், கவிஞர் எம்.சீ.ஏ. சாஹிர் கரீம், எம்.ஏ.சீ.எஸ்.ஜெலீனா, ஐ. ஜாபிர் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *