புத்தளம் இஹ்யாஉல் உலூம் அரபுக் கல்லூரியில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
இஹ்யாஉல் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு, கல்லூரியின் முதல்வர் அஷ்ஷேக் ஸனூஸ் ரஹ்மானி தலைமையில் கடந்த திங்கட்கிழமை (4) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இக்கட்டிடத்தை அல்-ஹாஜ் றிஸ்வான் அவர்கள் தமது தாய் தந்தையார்களின் பெயரில் (Aboo Salif, Zainul Arab) முழுமையாக கட்டித் தர முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் புத்தளம் மாநகர சபை ஆறாம் வட்டார உறுப்பினர் சகோதரர் ரனீஸ், பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நில்பான், அஷ்ரபிய்யா மத்ரஸா அதிபர் அஷ்ஷேக் இமாம்தீன் அஷ்ரபி, இஹ்யாவுல் உலூம் மத்ரஸாவின் நிர்வாக செயலாளர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி, பொருளாளர் வைத்தியர் அஸ்லம் நூரி, உப பொருளாளர் அஷ்ஷேக் ஸகீனத்கான், உறுப்பினர் சகோதரர் ரிழ்வான், உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் துஆப் பிரார்த்தனையை மத்ரஸாவின் நிர்வாக செயலாளர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹி மேற்கொண்டார்.





