உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிட இன்று விசேட வாய்ப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு குடும்பத்தினருக்கு விசேட வாய்ப்பை வழங்குவதற்கு சிறைச்சாலைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு அல்லது இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பொதி மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதி என்பவற்றை ஒரு கைதிக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *