அமெரிக்க நிபந்தனைகளுக்கு உடன்பட மறுத்த ஈரான்; அமைதிப் பேச்சு தோல்வி
16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் உடன்பாட்டிற்கு வரவில்லை. அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டனர்.
அணுசக்தி விவகாரம் போன்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளுக்கு இணங்க ஈரான் தயாராக இல்லை .அமெரிக்கா தனது இறுதி முன்மொழிவை அளித்துவிட்டது .
அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வது ஈரானின் கையில்தான் உள்ளது . என்றும் அவர் கூறுகிறார்.
