உள்நாடு

புத்தளம் நகரில் மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்கம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் வழிகாட்டுதலின் கீழ், நகரக்கிளைக்குட்பட்ட பல பகுதிகளில் மஸ்ஜித் சம்மேளனங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, புத்தளம் நகரத்திற்குள் மஸ்ஜித் சம்மேளனம் அமைக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தளம் கிழக்கு (Puttalam East Masjid Federation) பகுதியைச் சேர்ந்த சுமார் 14 மஸ்ஜிதுகளை உள்ளடக்கிய மஸ்ஜித் சம்மேளனம், நேற்று சனிக்கிழமை (11.04.2026) உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வு புத்தளம் நாகூர் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

புத்தளம் ஈஸ்ட் மஸ்ஜித் சம்மேளனத்தின் கீழ் உள்ள மஸ்ஜிதுகள் பின்வருமாறு:
நாகூர் ஜும்ஆ மஸ்ஜித், ஆயிஷா மஸ்ஜித், முஜாஹிதீன் மஸ்ஜித், தாருஸ்ஸலாம் மஸ்ஜித், இக்லாஸ் மஸ்ஜித், வாஹித் மஸ்ஜித், கொப்பரா மஸ்ஜித், மிஃராஜ் மஸ்ஜித், ஹுஸைன் மஸ்ஜித், பாரி மஸ்ஜித்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தஃவா பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஆதிப் ரஹ்மானி ஹஸ்ரத் குர்ஆன் பாராயணத்துடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வை அஷ்ஷெய்க் முஹ்ஸின் நத்வி ஹஸ்ரத் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகர கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி உரையாற்றினார்.

அவரது உரையில்,
மஸ்ஜித் சம்மேளனம் உருவாக்கப்பட வேண்டிய அவசியம்
அது முறையாக அமைக்கப்பட வேண்டிய விதம்
அதன் மூலம் புத்தளம் சமூகத்திற்கு செய்யக்கூடிய சேவைகள்
என பல முக்கிய அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டன. மேலும், நிர்வாகக் குழுவின் எதிர்கால பணித் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.

ஒவ்வொரு மஸ்ஜித்களிருந்தும் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய மூவர் கலந்து கொண்டனர்.

28 பேர் பொது சபை உறுப்பினர்களாகவும்
14 பேர் நிர்வாக சபை (EXCO) மற்றும் உயர்மட்ட உறுப்பினர்களாகவும்
தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாகத் தெரிவுகள்

தலைவர்: சகோதரர் ஹசீப்
செயலாளர்: சகோதரர் அஸ்லம்
பொருளாளர்: சகோதரர் ஃபஸில் (ஆசிரியர்)

உப தலைவர் இருவர்

  1. அஷ்ஷெய்க் ஸாஃபி ஸஃதி ஹஸ்ரத்
  2. அஷ்ஷெய்க் பாரிஸ் காஸிமி மதனி ஹஸ்ரத்
    உப செயலாளர்: அதிபர் அன்வர் (ஆசிரியர்)
    மேலும், பலர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக (EXCO) தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பல முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்:
புத்தளம் நகர கிளையின் தலைவர் – அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி
செயலாளர் – அஷ்ஷெய்க் அசீம் ரஹ்மானி
உப செயலாளர் – அஷ்ஷெய்க் இமாம்தீன் அஷ்ரபி
நல்லிணக்கப் பொறுப்பாளர் – அஷ்ஷெய்க் முஹ்ஸின் நத்வி
பிறை விவகார பிரிவு பொறுப்பாளர் – அஷ்ஷெய்க் ரகீப் ரஷாதி
தஃவா பிரிவு பொறுப்பாளர் – அஷ்ஷெய்க் ஆதிப் ரஹ்மானி
கல்வி பிரிவு பொறுப்பாளர் – அஷ்ஷெய்க் ஸல்மான் இஹ்ஸானி
வாலிபர் விவகார பிரிவு பொறுப்பாளர் – அஷ்ஷெய்க் ஹஸ்பான் ஸாபிதி ஹஸ்ரத்

வருங்காலங்களில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மூலம் புத்தளம் East பகுதிகுள் செய்யப்படக்கூடிய அனைத்து சேவைகளும் இந்த மஸ்ஜித் சம்மேளனம் (Puttslam East Masjid Federation) மூலமாகவே நடைமுறைக்கு வரும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

இறுதியாக, ஜம்இய்யத்துல் உலமாவின் உப செயலாளர் அஷ்ஷெய்க் இமாம்தீன் அஷ்ரபி நன்றியுரை வழங்கினார்.
துஆ மற்றும் கஃபாரத் மஜ்லிஸுடன் இரவு 9.30 மணியளவில் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.

மஸ்ஜித் அபிவிருத்தி உபகுழு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம்
நகரக்கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *